25 07 2025
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (3)
பள்ளி ஆண்டு விழாவில், நாடகம் ஒன்றில் நடித்ததைப் பார்த்த, ஹொன்னப்ப பாகவதர், 'சினிமாவில் நடிக்க விருப்பமா...' என்று கேட்டார். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஆனால், என் பெற்றோரை பொறுத்தவரை, அவர்களுக்கு, நான் சினிமாவில் நடிப்பதில் சம்மதம் தான்.
அம்மாவின் ஆசைக்காக, முதலில் இரண்டு கன்னட படங்களில் நடித்தேன்.'இன்னொரு படத்திலும் நடிச்சுடு. அதன்பின் படிக்கலாம்...' என்றார்.