கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி

கன்னடத்துப் பைங்கிளி” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சரோஜாதேவி 1938 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எழாம் நாள் பெங்களூரில் பிறந்தவர். இவரது தந்தை பைரப்பா போலீஸ் அதிகாரியாக இருந்தவர். நான்காவது மகளாக பிறந்த இவருக்கு சிறு வயதிலே இசை ஆர்வம் பிறந்தது. புனித தெரசா பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, இசைப் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏ ஜிந்தகி கே என்ற இந்தி பாடலை பாடினார் இவர். அந்த நிகழ்ச்சிக்கு கன்னட திரை உலகத்தின் பிரபல பட அதிபரும், நடிகருமான ஹொன்னப்ப பாகவதர் வந்திருந்தார். சரோஜாதேவியின் குரல் வளம் நன்றாக இருந்ததை கண்ட அவர், தனது சினிமா படத்தில் சரோஜாதேவியை பின்னணி பாட வைத்தால் என்ன என்ற எண்ணத்துடன் சரோஜாதேவியின் தாயார் ருத்ரம்மாவை அணுகினார். பாடல் பதிவுக்கான ஒத்திகையின் போது இவரை நடிகையாக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றவே உடனே மேக்கப் டெச்ட் எடுத்துப் பார்த்தார்.

சரோஜாதேவியின் தோற்றம் ஹொன்னப்ப பாகவதருக்கும் படக் குழுவிருக்கும் பிடித்துவிடவே சரோஜாதேவியை தனது 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப் படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் அவர். 1955 –ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம், வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமின்றி அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. தனது அடுத்த படமான 'பஞ்ச ரத்தினம்' என்ற கன்னட படத்திலும் கதாநாயகியாக நடிக்க வைத்தார், ஹொன்னப்ப பாகவதர். ஒரு படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டுப் படிக்கப் போய்விடலாம் என்று நினைத்த சரோஜாதேவிக்கு, வரிசையாக படங்கள் அமைந்து விடவே, நடிப்பு படிப்பாக மாறிப் போனது. 1958 ஆம் ஆண்டு ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ என்ற தமிழ் திரைப்படத்திலும், அதைத் தொடர்ந்து தங்கமலை ரகசியம் படத்திலும் நடித்தார்.

அதன் பிறகு எம்.ஜி.ஆருடன் திருடாதே படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சரோஜாதேவி. ஆனால், அதன் எம்.ஜி.ஆருடன் நடித்த ‘நாடோடி மன்னன்’ தான் முதலில் வெளியானது. ‘நாடோடி மன்னன்’ திரைப்படம் சரோஜாதேவிக்கு தமிழில் ஒரு முக்கியமான இடத்தை பெற்று தந்தது. அதன் பிறகு இவர் நடித்த ‘சபாஷ் மீனா’, ‘பாகப்பிரிவினை’ போன்ற படங்கள் அவரது திறமைக்கு எடுத்துக்காடாக அமைந்த போதிலும் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ‘கல்யாணப்பரிசு’ திரைப்படம்தான், தமிழ் சினிமாவில் அவருக்கு நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து, ‘வாழ வைத்த தெய்வம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘பாலும் பழமும்’, ‘குடும்பத்தலைவன்’, ‘பாசம்’, ‘ஆலயமணி’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘தர்மம் தலைக்காக்கும்’, ‘நீதிக்குப் பின் பாசம்’, ‘படகோட்டி’, ‘புதிய பறவை’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘நான் ஆணையிட்டால்’, ‘நாடோடி’, ‘பறக்கும் பாவை’, ‘அன்பே வா’, ‘குல விளக்கு’, ‘தாய்மேல் ஆணை’ என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரமாக வெற்றிக் கொடி நாட்டினார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் 26 படங்களில் நடித்துள்ள இவர், நடிகர் திலகம் சிவாஜிகணேசன், காதல் மன்னன் ஜெமினிகணேசன், தெலுங்கு மொழியில் நாகேஸ்வர ராவ், கன்னடத்தில் ராஜ்குமார் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் பல வெற்றிப் படங்களில் நடித்து, தென்னிந்திய சினிமாவில் மாபெரும் நட்ச்சத்திரமாக உயர்ந்தார். இந்தியிலும் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் இவர். வொக்கலிகர் இனத்தில் பிறந்தவர் இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி, போன்ற தென்னிந்திய மொழிகளில், சுமார் 200–க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்துள்ளார். 1967 ஆம் ஆண்டு என்ஜினியர் ஆன ஸ்ரீஹர்ஷாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு புவனேஸ்வரி, இந்திரா என இரு மகள்களும், ராமச்சந்திரன், கவுதம் என இரு மகன்களும் உள்ளனர். நடிகைகள் திருமணம் செய்து கொண்டால், பட வாய்ப்புகள் குறைந்துவிடும் என்கிற கருத்தைப் போக்கியவர் இவர். திருமணத்துக்கு பிறகு இவர் நடித்தப் பல படங்கள் பெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

1986 ஆம் ஆண்டு அவரது கணவர் ஸ்ரீஹர்ஷா காலமானார். அதன் பிறகு எட்டு ஆண்டுகள் நடிப்பை தவிர்த்த இவர், அதற்கு பிறகு தன் முடிவை மாற்றிக் கொண்டு, பூவுக்குள் பூகம்பம், அடிமை விலங்கு, பரம்பரை, தாய்மேல் ஆணை, பொன்ன்மனச் செல்வன், ஒரே தாய் ஒரே குலம், ஒன்ஸ்மோர் போன்ற படங்களில் நடித்தார்.

 

 

Sarojadevi Most popular articles

Sarojadevi Articles list

Sarojadevi Gemeni you tube

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %