எம்.ஜி.ஆரின் பூர்வீகம்
1966_ம் ஆண்டில் அன்பே வா, நான் ஆணையிட்டால், முகராசி, நாடோடி, சந்திரோதயம், தாலி பாக்கியம், தனிப்பிறவி, பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய 9 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். "அன்பே வா" ஏவி.எம். தயாரித்து, மகத்தான வெற்றி கண்ட படம். இதில் அவருக்கு ஜோடி சரோஜாதேவி.ஆகஸ்ட் 18_ந்தேதியன்று "முகராசி"யும், செப்டம்பர் 16_ந்தேதி "தனிப்பிறவி"யும் வெளியாயின. அதாவது, ஒரு மாத இடைவெளியில், இரண்டு எம்.ஜி.ஆர். படங்களை சின்னப்ப தேவர் வெளியிட்டு, சாதனை படைத்தார். முகராசியில் எம்.ஜி.ஆருடன் ஜெமினிகணேசன் இணைந்து நடித்தார். "நாடோடி", பி.ஆர்.பந்துலு தயாரித்த படம். இதில் எம்.ஜி. ஆருக்கு ஜோடி சரோஜாதேவி.
Read more: அன்பே வா" ஏவி.எம். தயாரித்து, மகத்தான வெற்றி கண்ட படம்
சிவாஜிகணேசனை வைத்து, பல படங்களை எடுத்தவர், பி.ஆர்.பந்துலு. அவரது "வீரபாண்டிய கட்டபொம்மன்" மகத்தான வெற்றி பெற்றதுடன் பல பரிசுகளையும் பெற்றது. பின்னர் சிவாஜியை வைத்து அவர் தயாரித்த "கர்ணன்", "கப்பலோட்டிய தமிழன்" ஆகிய படங்கள் தரமானவையாக இருந்த போதிலும், போதிய வசூல் இல்லை. கடன் சுமையினால் பந்துலு தவித்தார். கடனில் இருந்து மீள, எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்கத் தீர்மானித்தார். எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசினார். அவர் படத்தில் நடிப்பதற்கு எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டு, கால்ஷீட் கொடுத்தார். "ஆயிரத்தில் ஒருவன்" என்ற பெயரில், படத்தை பிரமாண்டமாக கலரில் தயாரிக்க பந்துலு ஏற்பாடு செய்தார். கதாநாயகியாக ஜெயலலிதா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த முதல் படம் இதுதான். மற்றும் எம்.என்.நம்பியார், மனோகர், ராம்தாஸ், நாகேஷ், எல்.விஜயலட்சுமி, மாதவி ஆகியோரும் நடித்தனர்.
எம்.ஜி.ஆருடைய மகத்தான வெற்றிப்படமான "எங்க வீட்டுப்பிள்ளை", 7 தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடி வரலாறு படைத்தது. இந்தப்படம் 1965 பொங்கல் தினத்தன்று வெளிவந்தது. நாகி ரெட்டி _சக்ரபாணியின் "விஜயா கம்பைன்ஸ்" தயாரிப்பு. இந்தப் படத்திற்கான வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுதினார். பாடல்கள்: வாலி, ஆலங்குடி சோமு. இசை. விஸ்வநாதன்_ ராமமூர்த்தி. சாணக்யா டைரக்ட் செய்தார். ஸ்ரீதரின் "கல்யாணப்பரிசு" படத்தின் ஒளிப்பதிவாளர் வின்சென்ட், "எங்கவீட்டுப்பிள்ளை"யின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.
எம்.ஜி.ஆர். ஏற்கனவே "நாடோடி மன்னன்" படத்தில் இரட்டை வேடத்தில் அருமையாக நடித்திருந்தபோதிலும், சமூகப் படங்களில் அவர் மிகச்சிறப்பாக இரட்டை வேடங்களில் நடித்த படம் "எங்கவீட்டுப்பிள்ளை." ஒரு எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. மற்றொரு எம்.ஜி.ஆருக்கு ஜோடி ரத்னா. எம்.என்.நம்பியார், எஸ்.வி.ரங்காராவ், தங்கவேலு, நாகேஷ், பண்டரிபாய், எல்.விஜயலட்சுமி, மாதவி, பேபி ஷகிலா ஆகியோரும் இதில் நடித்தனர். ராமு, இளங்கோ என்ற இரு வேடங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.
Read more: "எங்க வீட்டுப்பிள்ளை" மாபெரும் வெற்றி- 7 தியேட்டர்களில் வெள்ளி விழா