30 08 2016

சரோஜா தேவி: 6. அழுமூஞ்சி...!

ஜி.என். வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் பணத்தோட்டத்தில் எம்.ஜி.ஆரும் டைரக்டர் கே. சங்கரும் முதன் முதலில் கை கோர்த்தார்கள்.சிவாஜி கணேசனும் கே. சங்கரும் நீண்ட கால சிநேகிதர்கள். பி.எஸ். வீரப்பாவின் சூப்பர் ஹிட் படைப்பு ’ஆலயமணி’. கலைத் தொழிலிலும் அவர்களை ஒன்று சேர்த்தது.அதே நேரம் எம்.ஜி.ஆர், ஜி.என்.வேலுமணியை அனுப்பிக் கையோடு சங்கரை வரவழைத்தார்.‘ஏன் எதுக்கு எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிடறார்... சிவாஜியோட புது ப்ராஜெக்ட் ஆரம்பமாயிடுச்சே, அப்புறம் வரேன்னு சொல்லுங்களேன்.’ என்றார் அப்பாவியாக.‘அதை நீங்களும் எம்.ஜி.ஆரும் நேர்ல பேசித் தீர்த்துக்குங்க.’வேலுமணி விடமாட்டார் போலிருந்தது.
 
1962ல் உச்சக்கட்ட யுத்தம் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் நிலவியது. தினந்தோறும் விசிறிகளின் விஸ்வரூபம்! ரசிகர்களின் மண்டைகள் உடைந்த கதை பத்திரிகைகளில் வராத நாளே கிடையாது.சங்கருக்கு சங்கடம்.பயமும் குழப்பமும் போட்டியிட்டன. அது ஒரு காலை நேரம். வீட்டிலேயே சிற்றுண்டி அருந்தி விட்டு சங்கர் கிளம்பினார்.ராமாவரம் ராமச்சந்திரன் சங்கரை மறுபடியும் டிபன் சாப்பிட வற்புறுத்தினார்.ஏற்கனவே ஆயிற்று என்றாலும் ஆளை விடவில்லை. உண்ட பிறகே பேச்சு வார்த்தை என்றார். அஜீரணம் ஆனாலும் பரவாயில்லை என்று சங்கர் இலை முன்பு அமர்ந்தார்.
 
‘சார் ஆலயமணில முன்னாலேயே கமிட் ஆயிட்டேன். இப்ப உங்க படத்தையும் எப்படி ஒத்துக்கறது...?’சங்கரின் வாய்க்குள் வார்த்தைகள் சடுகுடு ஆடின.பார்க்க மிக எளிமையாகக் காட்சி தரும், சபைகளில் இனிமையாகப் பழகும் எம்.ஜி.ஆர். உள்ளுக்குள் சமர்த்தர்.எம்.ஜி.ஆரின் சொல்லை மீறுவதும், காலை இடறுவதும் வெளியே தெரியாத விளைவுகளை சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்கச் செய்யும்.சங்கர் தன் பதில் எம்.ஜி.ஆருக்குப் போதுமானது என்று புறப்பட ஆயத்தமானார். சங்கரின் பணிவையும் பவ்யத்தையும் எம்.ஜி.ஆர். கிண்டலடித்தார்.‘இந்த ஆக்டிங்லாம் இங்க வெச்சுக்காதீங்க. நீங்கதான் பணத்தோட்டம் டைரக்ட் பண்றீங்க...!’எம்.ஜி.ஆர். அடித்துப் பேசினார். சங்கருக்கு சம்மதிப்பதைத் தவிர வேறு யோசனை எப்படி வரும்?ஓர் படைப்பாளியைக் கைது செய்து சிறைப்படுத்தாத குறையாக சங்கரை பணத்தோட்டத்தில் சிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்.
 
ஆலய மணி, பணத்தோட்டம் இரண்டிலும் ஒரே நாளில் வேலை செய்ய வேண்டி சங்கரும், நாயகி சரோவும் வாஹினியில் மாறி மாறி காலை ஏழு மணி முதல் இரவு பத்து மணி வரையில் கஷ்டப்பட்டார்கள்.நவம்பர் 23 - மாலை. கே. சங்கரை தொலைபேசி கூவிக் கூவி அழைத்தது. மறுமுனையில் எம்.ஜி.ஆர்.‘சங்கர் நீங்கள் பெரிய வெற்றியைப் பெற்று விட்டீர்கள். சூப்பர் ஹிட் படத்தைக்கொடுத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!’அன்று ஆலயமணி ரிலீஸ். நடிகர் திலகத்தின் படம் நூறு நாள்களைக் கடந்து வசூலில் சாதனை புரியப் போகிறது... என்கிற ஆசீர்வாதம் முதன் முதலில் பொன்மனச் செம்மலின் வாயிலிருந்து!
 
எம்.ஜி.ஆரின் வாக்குப் பலித்தது.சென்னையில் பாரகன், ஸ்ரீகிருஷ்ணா, உமா, நூர்ஜஹான் என நான்கு தியேட்டர்களில் 100 நாள்கள் கண்ட முதல் படம் என்கிற அழியாப் பெருமையை அடைந்தது ஆலயமணி! பாரகன் டாக்கீஸில் நிறைவாக 20 வாரங்களைக் கடந்தது.ஆலயமணி தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் மாறுபட்ட ஆங்கில பாணி படம். மன வக்கிரம் நிறைந்த தியாகராஜன் என்ற புதுமையான வேடம் சிவாஜிக்கு மட்டும் அல்ல. கோலிவுட்டுக்கும் புதுசோ புதுசு! பி. எஸ். வீரப்பாவின் புகழ் பாடிய ஒரே சாதனைத் தயாரிப்பு!
 
‘கண்ணான கண்ணனுக்கு அவசரமா’ எஸ்.எஸ். ஆரும் - சரோவும் எடுத்த எடுப்பில் ஆடிப்பாடும் லவ் டூயட் சஸ்பென்ஸை ஏற்படுத்தும்.சந்தர்ப்பவசத்தால் சரோ சிவாஜி கணேசனின் காதலி ஆவார். ஜாவர் சீதாராமனின் வெகு நுட்பமான திரைக்கதை.‘மானாட்டம் தங்க மயிலாட்டம்’ சரோ ஆடிப்பாடி நடிக்கும் சூப்பர் ஹிட் பாடல். அக்காட்சி முடிந்ததும், சிவாஜியை சந்திக்க நேரும் சரோ, அவர் தனது எஸ்டேட் முதலாளி என்பதை அறியாமல் கேலி செய்வார்.நிஜம் தெரிந்ததும் சரோ எப்படிக் கிண்டல் அடித்தாரோ..., அதை அப்படியே சிவாஜி அபிநயித்துக் காட்டுவது அரங்கை அமர்க்களப்படுத்தும் சுவாரஸ்யம்.பின்னணி குரலில் பேக்ரவுண்ட் வாய்ஸில் ’ஹம்மிங்’குக்கு பிள்ளையார் சுழி போட்ட முதல் படம் ஆலயமணி.
‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா’ டூயட்டில் எல்.ஆர். ஈஸ்வரியின் ஹம்மிங் ஒலிக்கும். சரோவுக்கு ஈஸ்வரி பாடி சூப்பர்ஹிட் ஆன முதல் பாடலும் அதுவே.சிவாஜி கணேசனின் தூரிகையில் சகுந்தலையாக சரோ சில விநாடிகள் தோன்றுவார்.ஆலயமணியில் திருப்பம் ஏற்படுத்தும் மரணப்பாறை காட்சிகளை ‘வர்க்கலை’ என்கிற ஊரில் படமாக்கினார்கள்.க்ளைமாக்சில் சிவாஜி - சரோ இருவரும் இறந்து விடுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. நல்ல வேளையாக ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் ஆலயமணி சுபமாக முடிந்தது.
 
1962ல் சிவாஜி - சரோ இருவரது புகழையும் தக்க வைத்துக்கொண்ட ஒரே படமாக ‘ஆலயமணி’ அமைந்தது.‘ஆலயமணியில் ‘மீனாவாக’ சரோஜாதேவி வருகிறார். அவரது சொந்த மாடல் குறும்புத்தனங்களைக் காதல் கட்டங்களில் காண்கிறோம். அப்புறம் குறும்புகளுக்கு இடம் இல்லாமல் போய் விடுகிறது.அக்காவின் வாழ்க்கையைக் கடைத்தேற்றப் போக, அதற்காகத் தன் காதலைத் தியாகம் செய்ய நேரும் இடத்தில் அதிர்ச்சியைப் பொருத்தமாகக் காட்டியிருக்கிறார்’ என்று குமுதம் குறிப்பிட்டது.
 
----------------------------------
‘நீ படிப்பில் மேதையாக இருக்கலாம். பணத்தில் குபேரனாக இருக்கலாம். அழகில் மன்மதனாக இருக்கலாம். ஆனால் கண்ணியம் இல்லையே உன்னிடம்...‘சரோ தட்டுத் தடுமாறி ஒத்திகையில் கஷ்டப்பட்டு பேசிப் பார்த்தும், டைரக்டர் எல். வி. பிரசாத் மவுனமாக நின்றார். ஓகே சொல்லவில்லை. எல்.வி. பிரசாத்தின் ‘சுக்ரால்’ (இந்தி) மூலம் வடக்கேயும் சரோ வாகை சூடிய சமயம். 40 வாரங்களை வெகு சுலபமாகக் கடந்த ’சுக்ராலின்’ நாயகி உளறிக் கொட்டுவது சரோவுக்கே அவமானமாகத் தோன்றியது. அது ‘இருவர் உள்ளம்’ சினிமா ஷூட்டிங்.
dinamani.com 27 05 2016
 

Sarojadevi Most popular articles

Sarojadevi Articles list

Sarojadevi Gemeni you tube

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %