Mgr Most popular articles

எம்.ஜி.ஆர். படத்தில் கே.பாலசந்தர் "தெய்வத்தாய்"க்கு வசனம் எழுதினார்

நூறு படங்களுக்கு மேல் டைரக்ட் செய்துள்ள கே.பாலசந்தர், எம்.ஜி.ஆர். நடித்த படம் எதையும் டைரக்ட் செய்ததில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், எம்.ஜி.ஆர். நடித்த "தெய்வத்தாய்" என்ற படத்தின் மூலம்தான், அவர் வசனகர்த்தாவாக திரை உலகில் அடியெடுத்து வைத்தார் என்பது பலருக்கு வியப்பளிக்கும் செய்தியாக இருக்கும்.

எம்.ஜி.ஆர். 1963_ல் பணத்தோட்டம், கொடுத்து வைத்தவள், தர்மம் தலைகாக்கும், கலைஅரசி, பெரிய இடத்துப்பெண், ஆனந்தஜோதி, நீதிக்குப்பின்பாசம், காஞ்சித்தலைவன், பரிசு ஆகிய 9 படங்களில் நடித்தார். "பணத்தோட்டம்", ஜி.என். வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் தயாரித்த படமாகும். கே.சங்கர் டைரக்ட் செய்தார். கதாநாயகியாக சரோஜாதேவி நடித்தார். பி.எஸ்.ராமையா கதைக்கு வசனம் எழுதியவர் பாசுமணி. இசை: விசுவநாதன் _ ராமமூர்த்தி. வெற்றிகரமாக ஓடிய படம் இது. "பரிசு" படத்தில் எம்.ஜி.ஆரும், சாவித்திரியும் இணைந்து நடித்தனர். இசை: கே.வி.மகாதேவன். வசனம்: ஆரூர் தாஸ். இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியவர்: யோகானந்த். "தர்மம் தலைகாக்கும்", "நீதிக்குப்பின்பாசம்" ஆகியவை தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு. இரண்டிலும் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்தார்.இரண்டும் வெற்றிப்படங்கள் இந்தப்படங்களை இயக்கியவர் எம்.ஏ.திருமுகம்.

டி.ஆர்.ராமண்ணாவின் "பெரிய இடத்துப் பெண்" பெரிய வெற்றிப்படம். இதில், எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தவர் சரோஜாதேவி. மேகலா பிக்சர்ஸ் தயாரித்த "காஞ்சித் தலைவன்" படத்தில், மீண்டும் எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் இணைந்தனர். காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட நரசிம்மவர்மர் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட கதை. வசனங்களை கருணாநிதி எழுதினார். எம்.ஜி.ஆருடன் பானுமதி நடித்தார். மற்றும் எஸ்.எஸ்.ராஜேந்திரனும், விஜயகுமாரியும் இடம் பெற்றிருந்தனர். வசனம், நடிப்பு, காட்சி ஜோடனை எல்லாமே சிறப்பாக இருந்தன. இதை டைரக்ட் செய்தவர் காசிலிங்கம். இப்படம் 26_10_1963_ல் வெளிவந்தது. சரோடி பிரதர்ஸ் தயாரிப்பான "கலை அரசி"யில், எம்.ஜி.ஆருடன் பானுமதி நடித்தார். ஏ.காசிலிங்கம் டைரக்ட் செய்தார். வசனம்: ரவீந்தர். "பறக்கும் தட்டு" காட்சிகள் இடம் பெற்ற படம் இது. பி.எஸ்.வீரப்பாவின் ஹரிஹரன் பிக்சர்ஸ் தயாரித்த "ஆனந்த ஜோதி"யில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக தேவிகா நடித்தார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான். கமலஹாசனும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். வசனத்தை ஜாவர் சீதாராமன் எழுத, வி.என்.ரெட்டியும், ஏ.எஸ்.ஏ.சாமியும் டைரக்ட் செய்தனர்.

1964_ல் வேட்டைக்காரன், என் கடமை, பணக்கார குடும்பம், தெய்வத்தாய், தொழிலாளி, படகோட்டி, தாயின் மடியில் ஆகிய 7 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். இதில் "தெய்வத்தாய்", ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பு. இந்தப்படம் தயாரிக்கப்பட்ட காலக்கட்டத்தில், கே.பாலசந்தர் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். நாடகம் எழுதி, இயக்குவதில் புகழ் பெற்று விளங்கினார். அவர் எழுதிய "மெழுகுவர்த்தி", "மேஜர் சந்திரகாந்த்" ஆகிய நாடகங்களில் ரசிகர்களிடம் மிகுந்த ஆதரவைப் பெற்றிருந்தன.

ஒருமுறை "மெழுகுவர்த்தி" நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், பாலசந்தரின் திறமையை வெகுவாகப் பாராட்டியதுடன், அவரைப்போன்ற இளைஞர்கள் படத்துறையில் நுழையவேண்டும் என்று வற்புறுத்தினார். அதன் விளைவாக, "தெய்வத்தாய்" படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு பாலசந்தருக்குக் கிடைத்தது. இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்தார். பி.மாதவன் டைரக்ட் செய்தார். இசை: விசுவநாதன் _ ராமமூர்த்தி. இது வெற்றிப்படமாக அமைந்தது. தேவர் பிலிம்ஸ் தயாரித்த "வேட்டைக்காரன்" படத்தில் மேல் நாட்டு பாணியில் "கவ்பாய்" உடையில் எம்.ஜி.ஆர். நடித்தது ரசி கர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சாவித்திரி. ஆரூர்தாஸ் வசனம் எழுத டைரக்ட் செய்தவர் எம்.ஏ.திருமுகம். இந்தப்படமும், இதே ஆண்டு வெளிவந்த "தொழிலாளி"யும் தேவர் பிலிம்சின் வெற்றிப்படங்கள்.

வேலுமணி தயாரித்த "படகோட்டி"யில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர். சக்தி கிருஷ்ணசாமியும், ஏ.எல்.நாராயணனும் வசனத்தை எழுதினர். விஸ்வநாதன் _ ராமமூர்த்தி இசை அமைத்த இந்தப் படத்தை டி.பிரகாஷ்ராவ் டைரக்ட் செய்தார். இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

MGR Articles list

  • Yathaartham - views
    Political views about Tamils in Srilanka
  • Health articles
    Health is important in your life, that's why it is important to take preventive measures early

MGR you tube videos

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %