dinamalar.com may 2012

பொன்விழா கொண்டாடும் பொன்னான படங்கள்...!

வேகமாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் பெற்ற பிள்ளைகளின் பிறந்த நாளைக்கூட மனதில் வைத்துக் கொண்டாட முடியாமல் இருக்கிறோம். அப்படி இருக்கும்போது இந்த ஆண்டு 50 வயதை தொட்டு பொன்விழா கொண்டாடும் படங்களை பற்றி மட்டும் எப்படி நினைத்துக் கொண்டிருப்போம். இதோ தினமலர் இணையதளம் நினைவூட்டுகிறது. இந்த ஆண்டிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முந்தைய 1962ம் ஆண்டு சினிமாவில் பொற்காலமாக இருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என்ற மூவருக்கும் இடையில் ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்தது. இது ரசிகனுக்கு தரமான படங்களை கொடுத்தது. பா வரிசை படங்கள் அதிகம் வெளிவந்தது இந்த ஆண்டில்தான்.

மொத்தம் 51 படங்கள் வெளிவந்திருந்தாலும் மக்கள் கவனத்தை ஈர்த்தது சுமார் 20 படங்கள். அவை இப்போதும் காலத்தை கடந்து நிற்கிறது. இந்த ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அதிக பட்டசமாக 7 படங்களிலும், எம்.ஜி.ஆர் 6 படங்களிலும், ஜெமினி கணேசன் 5 படங்களிலும் நடித்திருந்தார்கள்.

 

எம்.ஜி.ஆர் நடித்த படங்கள்:

குடும்ப தலைவன்: தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில், எம்.ஏ திருமுகம் இயக்கி இருந்தார். கே.வி.மகாதேவன் இசை அமைப்பு. சரோஜாதேவி ஹீரோயின்

மாடப்புறா: பி.வி.என் பிக்சர்ஸ் தயாரித்து, எஸ்.ஏ.சுப்பாராமன் இயக்கிய படம். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். சரோஜாதேவி ஜோடி.

பாசம்: டி.ஆர்.ராமண்ணா இயக்கிய படம் விசுவநாதன்&ராமமூர்த்தி இசை, ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரிப்பு. சரோஜாதேவி ஹீரோயின்

தாயை காத்த தனயன்: தேவர் பிலிம்ஸ் தயாரித்து எம்.ஏ.திருமுகம் இயக்கிய படம். கே.வி.மகாதேவன் இசை. சரோஜாதேவி ஹீரோயின்.

விக்ரமாதித்தன்: பாரதி புரொடக்ஷன் தயாரித்து, டி.ஆர்.ரகுநாத் இயக்கிய படம். எஸ்.ராஜேஷ்வரராவ் இசை. பத்மினி ஜோடி.

(சிறப்பு குறிப்பு 4 படங்களில் சரோஜாதேவிதான் ஹீரோயின், ஒரு படத்தில் மட்டும் பத்மினி)

சிவாஜி நடித்த படங்கள்

ஆலயமணி: கே.சங்கர் இயக்கத்தில் பி.எஸ்.வி பிக்சர்ஸ் தயாரித்த படம். விசு&ராம் இசை. ஜோடி சரோஜாதேவி. இவர்கள் தவிர எஸ்.எஸ்.ராஜேந்திரன்-&விஜயகுமாரி ஜோடியும் நடித்திருந்தனர்.

பலே பாண்டியா: பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பு, பி.ஆர்.பந்துலு இயக்கம், விசு&ராம் இசை. தேவிகா ஹீரோயின்

.பந்த பாசம்: பீம்சிங் இயக்கம், சாந்தி பிலிம்ஸ் தயாரிப்பு, தேவிகா, சாவித்தி என இரு ஜோடிகள்.

நிச்சயதாம்பூலம்: ஜமுனா ஹீரோயின், விசு&ராம் இசை, வி.எஸ்.ரங்கா இயக்கம்.

பார்த்தால் பசி தீரும்: ஏவிஎம் தயாரித்த படம். இயக்கம் ஏ.பீம்சிங், ஜோடி சரோஜாதேவி. ஜெமினிக்கு ஜோடி சாவித்ரி, சவுகார் ஜானகி. கமல் குழந்தை நட்சத்திரமாக நடித்த படம்.

படித்தால் மட்டும் போதுமா: இதுவும் பீம்சிங் இயக்கிய படம், ரங்கநாதன் பிக்சர்ஸ் தயாரிப்பு, ஜோடி சாவித்ரி, விசு&ராம் இசை.

வடிவுக்கு வழைகாப்பு: புராண படங்களை இயக்கும் ஏ.பி.நாகராஜன் இயக்கிய சமூக படம். கே.வி.மகாதேவன் இசை. ஸ்ரீலட்சுமி பிக்சர்ஸ் தயாரிப்பு. ஹீரோயின் சாவித்ரி.

(சிறப்பு குறிப்பு வடிவுக்கு வளைகாப்பு தவிர மற்ற படங்கள் அனைத்திற்கும் எம்.எஸ்.விசுநாதன் இசை அமைத்துள்ளார்)

ஜெமினி கணேசன் நடித்த படங்கள்

காத்திருந்த கண்கள்: வசுமதி பிக்சர்ஸ் தயாரிப்பு, டி.பிரகாஷ்ராவ் இயக்கம், சாவித்ரி ஜோடி. விசு&ராம் இசை.

கொஞ்சும் சலங்கை: ராமன் புரொடக்ஷன் தயாரிப்பு, எம்.வி.ராமன் இயக்கம், சுப்பையா நாயுடு இசை. சாவித்ரி ஜோடி

பாத காணிக்கை: கே.சங்கர் இயக்க சரவணா பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விசு&ராம் இசை. ஜோடி சாவித்ரி

சுமைதாங்கி: ஸ்ரீதர் இயக்க விசாலாட்சி பிலிம்ஸ் தயாரித்துள்ள படம். விசு&ராம் இசை. தேவிகா ஹீரோயின்

ஆடிப்பெருக்கு: கே.சங்கர் இயக்கம். ஹீரோயின் சரோஜாதேவி.

(சிறப்பு குறிப்பு 3 படங்களில் சாவித்ரி ஜோடி)

இதுதவிர டி.எம்.சவுந்தராஜன் நடிப்பில் உருவான பட்டினத்தார், முத்துராமன் நடித்த போலீஸ்காரன் மகள், எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்த சாரதா ஆகிய படங்களும் பொன்விழா கண்டுள்ளன.

காலத்தை வென்று நிற்கும் இந்தப் படங்களுக்கு நம்மால் பொன்விழா கொண்டாட முடியாவிட்டாலும் மனதளவில் நினைத்துக் கொள்வோமே...

Cine info List

  • Yathaartham - views
    Political views about Tamils in Srilanka
  • Health articles
    Health is important in your life, that's why it is important to take preventive measures early

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %