19 12 2016
 
சரோஜா தேவி: 16. பல்லாண்டு வாழ்க!
 
1996. செப்டம்பர் 20. நேரு விளையாட்டு அரங்கம். சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் சிறந்த கலைஞர்களுக்கான 17ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா! ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெற வந்திருந்தவர் சரோஜாதேவி. அதனை அபிநய சரஸ்வதிக்கு வழங்கியவர் நடிகர் திலகம். கணேசனும்- சரோவும் தங்களை மறந்து ‘இருவர் உள்ளம்’ காலத்துக்கே போய் ஆனந்தத்தில் கட்டித் தழுவிக் கொண்டனர். கைகளில் பொன்னாடையோடு வெட்கிச் சிரித்தவாறு தலை குனிந்து நின்றார் - சிறப்பு விருந்தினர் சென்னை நகர மேயர் மு.க. ஸ்டாலின். அதை வண்ணப்புகைப்படமாக வெளியிட்டு ‘பாந்தமான காட்சி!’ என்று வர்ணித்தது தினமணி நாளிதழ்.இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் சின்னத்திரைகளில் சரோஜாதேவியை நடிக்க அழைத்தார்கள். மறுப்பேதும் சொல்லாமல் ‘கங்கா யமுனா சரஸ்வதி சங்கமம்’ தொலைக்காட்சித் தொடரில் ‘வழக்கறிஞர் பவானி சங்கர்’ வேடத்தில் வலம் வந்தார் சரோ.

Read more: சரோஜா தேவி: 16. பல்லாண்டு வாழ்க!

05 12 2016

சரோஜா தேவி: 15. சரோ நல்ல பொண்ணு...!

ஜனவரி 7. சரோவின் பிறந்த நாள்! அன்றைய கோலிவுட்டின் கோலாகலத் திருவிழா! சரோ வசித்த அடையாறு காந்தி நகர் வீட்டில் கேளிக்கையும் கும்மாளமும் அமர்க்களப்படும் என்று நினைத்தால் அது தவறு.பிறந்த தினத்தில் ஆண்டு தோறும் ‘சத்திய நாராயண பூஜை’ செய்வது சரோவின் வழக்கம். சத்தியநாராயண ஸ்வாமிக்கும் சரோ பிறப்புக்கும் என்ன சம்பந்தம்? அதற்கானத் தொடர்பை சரோ தெளிவுப்படுத்தியுள்ளார்.‘ நிறைமாத கர்ப்பிணி அம்மா. அன்று பயங்கர வயிற்று வலியால் அவதிப்பட்டார். அப்பா வழக்கம் போல் அலுவலகத்தில். பாட்டனாரைத் தவிர, பெரியவர்கள் வேறு யாரும் உதவிக்குக் கிடையாது.தாய் துடிதுடிப்பதைப் பார்த்துச் சிறுமிகளான சகோதரிகள் பயத்தில் அழுதனர். தாத்தா பேத்திகளை சமாதானம் செய்வாரா..

Read more: சரோஜா தேவி: 15. சரோ நல்ல பொண்ணு...!

28 11 2016

சரோஜா தேவி: 14. சாந்துப் பொட்டு…!
மலையாள சினிமாவில் மட்டும் சரோஜாதேவி நடித்தது கிடையாது. ‘அந்தக் காலத்தில் மலையாளச் சித்திரங்களில் நடிகைகள் முண்டு எனப்படும் துண்டு மட்டும் அணிந்து நடிப்பார்கள். ஏராளமான அழைப்புகள் எனக்குக் கேரளத்தில் இருந்து வந்தன. நான் அவ்வாறு வெறும் முண்டுடன் நடிக்கச் சம்மதிக்கவில்லை. ’ -சரோஜாதேவி. தனது இயல்பு, சுவை, விருப்பம் ஆகியன பற்றி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சரோ கூறியவை- ‘கூந்தலுக்கு என்ன எண்ணை தேய்த்துக் குளிப்பீர்கள்? ’‘விளக்கெண்ணை உபயோகிப்பேன். அது உடம்புக்கு ரொம்பக் குளிர்ச்சி! ’
 
‘உங்கள் அழகின் ரகசியம் என்ன? ’
‘ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்!’
‘முகத்திற்கு ஏதாவது அழகுக் குறிப்பு?’
‘அய்யோ, ஒன்றும் இல்லையே. நான் பழங்கால ஸ்டைலில் மஞ்சள் பூசித்தான் குளிப்பேன்.’‘கூந்தலைப் பாதுகாக்க, முட்டை போல ஏதாவது? ’‘அய்யயோ, ரொம்ப நாற்றம் எடுக்குமே’ ‘உடலை எப்படி இவ்வளவு கச்சிதமாக வைத்திருக்கிறீர்கள்! ’ ‘சின்ன விஷயத்துக்கெல்லாம் ஓஹோன்னு சந்தோஷப்பட்டு நான் உப்ப மாட்டேன். சின்ன துக்கத்தைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் உருகிப்போய் விடுவேன்.சாப்பாட்டு விஷயத்திலிருந்து எல்லாவற்றிலுமே நான் ரொம்ப ‘லைட்’ தான். உடற்பயிற்சி எதுவும் நான் செய்வது கிடையாது. நடுவில் கொஞ்சம் பத்தியமாகச் சாப்பிட்டு வந்தேன். இப்போது அதுவும் இல்லை. ’‘வெளியே போகும் போது மேக் அப் செய்து கொள்வீர்களா? ‘நான் வெளியே போனால்தானே? விழாக்களிலெல்லாம் அதிகம் கலந்து கொள்ள மாட்டேன். சினிமா பார்க்க வேண்டுமென்றால், வீட்டில் போட்டுப் பார்ப்பேன். ’

Read more: சரோஜா தேவி: 14. சாந்துப் பொட்டு…!

21 11 2016

சரோஜா தேவி: 13. அபிநய சரஸ்வதி!
1938 ஜனவரி 7ஆம் தேதி பிறந்தவர் சரோ. 2016 ஜனவரி ஆறாம் தேதியுடன் 77 ஆண்டுகள் பூர்த்தி ஆகி, 78வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.தென் இந்தியாவில் பிரபல ஹீரோயின்கள் எல்லாரும் சரோவுடன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.ஓஹோவென்று ஓடிய அவரது எந்தப் படத்திலும் மற்றொரு நாயகியின் பங்களிப்பால், அபிநய சரஸ்வதி அவரது தனித்துவத்தையோ, நன் மதிப்பையோ, குறும்பில் கொடி கட்டிப் பறக்கும் குளு குளு நடிப்பையோ இழந்தது கிடையாது. அதுவே சரோவின் மிகப் பெரிய பலம்! சிம்ரன் உள்பட அநேகம் பேர் சரோவுடன் தங்கள் நடிப்புக் கணக்கைத் தொடங்கி புகழ் பெற்றிருக்கிறார்கள். சரோவுடன் சங்கமித்தவர்கள்-

Read more: சரோஜா தேவி: 13. அபிநய சரஸ்வதி!

07 11 2016

சரோஜா தேவி: 12. ஆசானும்... அண்ணாச்சியும்.-

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி சரோ-, ‘எம்.ஜி.ஆர். என் உடன் பிறவா சகோதரர் என்றால், என் கலை உலக ஆசான் சிவாஜி ஆவார். சிவாஜிக்கு மூச்சே நடிப்புதான். நடிகர் திலகத்தின் இடத்தை சினிமாவில் யாராலும் நிரப்ப இயலாது. அவரே இன்னொரு ஜென்மம் எடுத்து வந்தால் மட்டுமே அந்த இடத்தை நிரப்ப முடியும்! நடிப்பைத் தவிர என் குருவுக்கு வேறு உலகம் தெரியாது. நடிக்க வந்து விட்டால் செட்டுக்குள்ளயே இருப்பார். டைரக்டர் பிரேக் சொன்ன பிறகுதான் வெளியே போவார். பெங்களூருவில் பள்ளியில் படித்து வந்த காலம். ‘மனோகரா’ நாடகம் நடைபெற்றது. தோழிகள் சிலர் ‘சிவாஜி மனோகரனாக நடிக்கிறார். நேருக்கு நேர் அவரது அற்புத நடிப்பைப் பார்க்க நமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நீயும் அவசியம் வரவேண்டும்’ என்று என்னையும் வற்புறுத்தி அழைத்தார்கள்.

Read more: சரோஜா தேவி: 12. ஆசானும்... அண்ணாச்சியும்.

30 10 2016

சரோஜா தேவி: 11. மூவர் உலா!

சரோ நடித்த மொத்தத் தமிழ்ப்படங்களின் எண்ணிக்கை ‘ஆதவன்’ வரையில் தொண்ணூறுக்குள் அடங்கி விடும்.அவற்றில் மக்கள் திலகத்துடன் 26, நடிகர் திலகத்துடன் 20, காதல் மன்னனுடன் 20 ஆக 66 படங்களில் தமிழ் சினிமாவின் மூவேந்தர்களுடன் நடித்துள்ளார்.வேறு எந்த நாயகியாலும் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாத அரிய சாதனை!
‘எங்க வீட்டுப் பிள்ளை’ - உதயசூரியன் போல் எப்போது பார்த்தாலும் ரசிக்கக் கூடியப் புத்துணர்வை ஊட்டும் உற்சாகமான வண்ணச் சித்திரம்! டூயல் எம்.ஜி.ஆர். இரண்டு நாயகிகள். பொதுவாகப் ‘புரட்சி நடிகர்’ ஹீரோவாகத் தோன்றும் சினிமாக்களில் நாயகிகளுக்கு கனவில் டூயட் பாட மாத்திரமே சந்தர்ப்பம் கிடைக்கும். கிடைத்த சைக்கிள் கேப்பில் சரோ சாமர்த்தியமாக நடித்து, குமுதம் விமர்சனத்தின் மிக அரிய பாராட்டைப் பெற்றார்! அத்தனை லேசில் சென்ற நூற்றாண்டின் வார இதழ்கள் எவரையும் போற்றியது கிடையாது.

Read more: சரோஜா தேவி: 11. மூவர் உலா!

Sarojadevi Most popular articles

Sarojadevi Articles list

Sarojadevi Gemeni you tube

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %