தியாகராஜனுக்காக வந்தேன்... -'கொஞ்சு குரல்' சரோஜாதேவி

Tamilcinema.com 21 june 2013

தி.நகரில் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் கம்பீரமாக நிற்கும் ஜெயாலுக்காஸ் கட்டிடம் நடிகர் தியாகராஜனுக்கு சொந்தமானது. ஒருவகையில் தியாகராஜனும் அப்படிதான். வளைந்தும் கொடுக்காமல் வழுக்கியும் விழாமல் இன்னமும் கம்பீரம் காத்து வருகிறார் மனுஷன். எல்லாம் பிள்ளைக்காக!

பிள்ளை பிரசாந்த் மட்டும் என்னவாம்? சரியான அப்பா பிள்ளை. இந்த வருடம் தன் பிறந்தநாளை அமர்க்களமாக கொண்டாடிய தியாகராஜனுக்கு பிள்ளை கொடுத்தது சர்பிரைஸ் கிஃப்ட்!

அந்தகால தேவதை, இந்த கால சாதனையாளர் சரோஜாதேவிக்கு போன் அடித்தாராம் பிரசாந்த். 'அப்பாவோட பிறந்த நாளை கிராண்டா கொண்டாடனும்னு முடிவு பண்ணியிருக்கோம். நீங்க கலந்துகிட்டா அப்பாவுக்கு சந்தோஷமா இருக்கும்' என்றாராம். 'இருக்கிற வேலைகளை அப்படியே ஒதுக்கி வைச்சுட்டு வந்துட்டேன். ஏன்னா, நடுவுல ஒரு பத்து வருஷம் சினிமாவை விட்டே ஒதுங்கியிருந்தேன். அந்த நேரத்தில் என்னை வந்து பார்த்தார் தியாகராஜன்'.

'

பூவுக்குள் பூகம்பம்னு ஒரு படம் எடுக்கிறேன். நீங்க அவசியம் நடிக்கணும்னு கேட்டார். 'எனக்கு மனசு சரியில்ல. இப்ப முடியாதே' என்றேன். நீங்க எப்ப வேணா ஷுட்டிங் வரலாம். எப்ப வேணா போகலாம். உங்களுக்கும் ஒரு மாறுதலா இருக்கும்னு வற்புறுத்தி அழைச்சுட்டு வந்தாரு. ஒரு குழந்தை மாதிரி பார்த்துகிட்டாரு. அந்த அன்புக்காகதான் இங்கே நான் வந்திருக்கேன். அவர் நு£று வயசு வரைக்கும் வாழணும்' என்றார் சரோஜாதேவி.

மறுபடியும் நானே டைரக்ட் பண்ற படத்தில் பிரசாந்த் ஹீரோவா நடிக்கப் போறார். நல்ல கம்பெனி, நல்ல டைரக்டர், நல்ல கதை வந்தால் பிரசாந்த்தை வெளி கம்பெனிகளிலும் நடிக்க வைக்கிறதுல எனக்கும் தயக்கம் இல்லே என்றார் பர்த்டே ஃபாதர் தியாகராஜன்.