பொன்விழா கொண்டாடும் பொன்னான படங்கள்...!
வேகமாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் பெற்ற பிள்ளைகளின் பிறந்த நாளைக்கூட மனதில் வைத்துக் கொண்டாட முடியாமல் இருக்கிறோம். அப்படி இருக்கும்போது இந்த ஆண்டு 50 வயதை தொட்டு பொன்விழா கொண்டாடும் படங்களை பற்றி மட்டும் எப்படி நினைத்துக் கொண்டிருப்போம். இதோ தினமலர் இணையதளம் நினைவூட்டுகிறது. இந்த ஆண்டிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முந்தைய 1962ம் ஆண்டு சினிமாவில் பொற்காலமாக இருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என்ற மூவருக்கும் இடையில் ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்தது. இது ரசிகனுக்கு தரமான படங்களை கொடுத்தது. பா வரிசை படங்கள் அதிகம் வெளிவந்தது இந்த ஆண்டில்தான்.
மொத்தம் 51 படங்கள் வெளிவந்திருந்தாலும் மக்கள் கவனத்தை ஈர்த்தது சுமார் 20 படங்கள். அவை இப்போதும் காலத்தை கடந்து நிற்கிறது. இந்த ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அதிக பட்டசமாக 7 படங்களிலும், எம்.ஜி.ஆர் 6 படங்களிலும், ஜெமினி கணேசன் 5 படங்களிலும் நடித்திருந்தார்கள்.