Mgr Most popular articles

"தாய் சொல்லைத் தட்டாதே" சூப்பர் ஹிட், நூறு நாட்கள், தொடர்ந்து ஹவுஸ்புல்

"திருடாதே" வெற்றியின் மூலமாக, சமூகப் படங்களில், நவீன உடைகளில் நடிக்கலாம் என்ற நம்பிக்கை எம்.ஜி.ஆருக்கு உண்டாயிற்று. சரித்திரப் படங்களை உருவாக்க செலவு அதிகம். அதிக காலம் பிடிக்கும். ஆனால், சமூகப் படங்களை குறைந்த செலவில், குறுகிய காலத்தில் தயாரிக்கலாம். எனவே, எம்.ஜி.ஆர். படங்கள் வரிசையாக வரத்தொடங்கின.

1961_ல் "திருடாதே"க்கு பிறகு, "சபாஷ் மாப்பிளே", "நல்லவன் வாழ்வான்", "தாய் சொல்லைத் தட்டாதே" ஆகிய மூன்று படங் கள் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந் தன. இதில், "சபாஷ் மாப்பிளே" என்ற படம் நடிகை மாலினியின் சொந்தப்படம். (சபாஷ் மீனா வில் சிவாஜியுடன் கதாநாயகி யாக நடித்தவர், மாலினி) மாலினிக்கு படங்களே இல்லை. அவர் வேண்டிக் கொண்டதால், "சபாஷ் மாப் பிளே" படத்தில் நடிக்க எம்.ஜி. ஆர். சம்மதித்தார்.

 

எம்.,ஜி.ஆரு டன் கதாநாயகியாக மாலினி நடித்தார். படத்தை மாலினியின் கணவர் ராகவன் டைரக்ட் செய்தார். டைரக்ட் செய்தார் என்பதை விட, டைரக்ட் செய்யக் கற்றுக் கொண்டார் என்றுதான் கூற வேண்டும். விளைவு, இந்தப்படம் சரியாக ஓடவில்லை. அரசு பிக்சர்ஸ் தயாரித்த "நல்லவன் வாழ்வான்" படத்தில் எம்.ஜி.ஆரும், ராஜசுலோசனா வும் ஜோடியாக நடித்தனர். அண்ணா எழுதிய கதை இது. ப.நீலகண்டன் டைரக்ட் செய் தார். இது சராசரி படம். 7_11_1961_ல் வெளியான "தாய் சொல்லைத் தட்டாதே" பெரிய வெற்றிப்படம். இது சாண்டோ சின்னப்ப தேவர் தயாரித்த படம்.

1956_ல் படக்கம்பெனி தொடங்கிய சின்னப்ப தேவர், எம்.ஜி.ஆரை வைத்துத்தான் தனது முதல் படத்தை ("தாய்க் குப்பின் தாரம்") தயாரித்தார். இருவரும் நீண்ட கால நண்பர்கள். எனினும் "தாய்க்குப்பின் தாரம்" படத்தை எம்.ஜி.ஆரிடம் அனுமதி பெறாமல் தெலுங்கில் "டப்" செய்து வெளியிட்டதால் தேவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் சின்னப்பதேவர், வேறு நடிகர்களை வைத்து "நீலமலைத்திருடன்" (ரஞ்சன்), "யானைப்பாகன்" (கல்யாண்குமார்), வாழவைத்த தெய்வம் (ஜெமினிகணேசன்), கொங்கு நாட்டுத் தங்கம் (ஆனந்தன்) முதலிய படங்களை எடுத்துக்கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆருக்கும், தேவருக் கும் கருத்து வேற்றுமை ஏற்பட்ட போதிலும் ஒருவர் மீது ஒருவர் அன்பும், பாசமும் கொண்டிருந் தனர். "நல்ல நண்பர்களாக இருந்து, இப்படிப் பிரிந்து விட்டோமே" என்று இருவரும் வருந்தினர்.

1961_ம் ஆண்டின் பிற்பகுதி யில், "தாய் சொல்லைத் தட் டாதே" என்ற பெயரில் புதிய படத்தை தயாரிக்க தேவர் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். இதற்கான கதை_வசனத்தை ஆரூர் தாஸ் எழுதி முடித்திருந்தார். இந்தப் படத்துக்கான பாடல் பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, வேறொரு படப்பிடிப்புக்காக ஸ்டூடியோவுக்கு எம்.ஜி.ஆர். வந்தார். அவரும், தேவரும் எதிர்பாராமல் சந்தித்துக் கொண்டனர். இருவரும் கட்டித் தழுவிக் கொண்டனர். ஐந்து வருட இடைவெளிக்குப்பிறகு, இருவரும் நட்பை புதுப்பித்துக் கொண்டனர்.

"என் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் அண்ணே!" என்று தேவர் கேட்டுக் கொண்டார். "நிச்சயமாக நடிக்கிறேன் அண்ணே" என்றார், எம்.ஜி.ஆர். (எம்.ஜி.ஆரை விட தேவர் கொஞ்சம் மூத்தவர். எனினும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்று தான் அழைப்பார்.)

"தாய் சொல்லைத் தட்டாதே" படத்தில் ஜெமினி கணேசனை யும், சரோஜாதேவியையும் ஜோடியாக நடிக்க வைக்க தேவர் திட்டமிட்டிருந்தார். அந்தத் திட்டத்தை மாற்றி, எம்.ஜி.ஆரையும், சரோஜாதேவி யையும் நடிக்க வைத்தார். ஏற்கனவே கதை_வசனம் தயா ராக இருந்ததால், படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்க எம்.ஜி.ஆர். சம்மதித்து, அதற் கேற்றபடி `கால்ஷீட்' கொடுத் தார். கதை அமைப்பிலும், வச னத்திலும், எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி ஒரு சில மாற்றங்களை மட்டும் ஆரூர்தாஸ் செய்தார். எம்.ஆர்.ராதாவும் இப்படத் தில் நடித்தார். கே.வி.மகாதேவன் இசை அமைக்க, எம்.ஏ.திருமுகம் டைரக்ட் செய்தார்.

படப்பிடிப்பு வேகமாக நடந் தது. ஒரே மாதத்தில் படம் முடி வடைந்து, 7_11_61 தீபாவளித் திருநாளில் ரிலீஸ் ஆகியது. "தாய் சொல்லைத் தட்டாதே" சூப்பர் ஹிட் படமாக அமைந் தது. நூறு நாட்கள், தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி, வெற்றி விழா கொண்டாடியது. எம்.ஜி.ஆர் _ தேவர் நட்புறவு முன்பைவிட பலமாக அமைய, தொடர்ந்து தேவரின் படங்களில் எம்.ஜி.ஆர். நடிக்கலானார்

MGR Articles list

  • Yathaartham - views
    Political views about Tamils in Srilanka
  • Health articles
    Health is important in your life, that's why it is important to take preventive measures early

MGR you tube videos

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %