- Category: Cine info
- Hits: 3246
அட்வான்ஸா? இந்தா ஒரு சவரன்!
1965-ஆம் ஆண்டு வாக்கில் ஒருநாள் அதிகாலையில் 5 மணிக்கு நடிகை சரோஜாதேவி வீட்டுக்குக் காரை ஓட்டிச் சென்றார் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் நாகிரெட்டி. அப்போது நடிகை சரோஜா தேவியின் வீட்டு கேட் திறக்கப்படவில்லை. எனவே காரை வெளியே நிறுத்திவிட்டு ஸ்டீரிங்கில் கைகளை வைத்துச் சாய்ந்திருந்தார்.
6 மணி அளவில் வெளியே வந்த நடிகை சரோஜா தேவியின் தாயார் வெளியே கார் நிற்பதைப் பார்த்தார். அவருக்கு அந்த ஹெரால்ட் காரை அடையாளம் தெரியும். உள்ளே ஓட்டுநர் ஆசனத்தில் ரெட்டிகாருவைப் பார்த்த அவர்,""சார் நீங்கள் இப்படி வெளியே இருக்கலாமா? இது உங்கள் வீடு அல்லவா? காலிங் பெல் அடித்திருக்கலாமே'' என்றார். ""அம்மா எனக்கு அதிகாலையில் எழுந்து பழக்கம். அதனால் புறப்பட்டேன். உங்களை சிரமப்படுத்த வேண்டாம் என்று இப்படி இருந்துவிட்டேன்'' என்று சொன்னார்.
பின்னர் நடிகை சரோஜாதேவியின் தாயார் ரெட்டிகாருவை அழைத்துக் கொண்டுபோய் ஹாலில் உட்கார வைத்தார். இதற்குள் தகவல் அறிந்து நடிகை சரோஜாதேவியும் அவசரமாக ஹாலுக்கு வந்து,""ரெட்டி காரு, நீங்கள் ஏன் சிரமம் எடுத்துக்கொண்டு வந்தீர் கள்?'' என்று கேட்க ரெட்டியார் சொன்னார்: ""எங்க வீட்டுப் பிள்ளை' என்று ஒரு படம் எடுக்கப் போகிறேன். எம்.ஜி.ஆர். ஹீரோ, நீங்கள்தான் கதாநாயகி என்று தீர்மானித்தேன். உடனே உங்களைப் பார்த்து அட்வான்ஸ் கொடுத்துவிட்டுப் போகலாமே என்று வந்தேன்'' என்று சொல்லிவிட்டு கையில் இருந்த ஒரு சவரனை அவரிடம் கொடுத்தார். அட்வான்ஸ் ஆக ஒரு சவரன் கொடுப்பது நாகிரெட்டி அவர்களின் வழக்கம்.
("இசையும் இலக்கியமும்' நூலிலிருந்து)
News & Events
Cine info List
-
Cine info
-
அட்வான்ஸா? இந்தா ஒரு சவரன்!
dinamani.com29 July 2012 அட்வான்ஸா? இந்தா ஒரு சவரன்! 1965-ஆம் ஆண்டு வாக்கில் ஒருநாள் அதிகாலை…
-
பொன்விழா கொண்டாடும் பொன்னான படங்கள்...!
dinamalar.com may 2012 பொன்விழா கொண்டாடும் பொன்னான படங்கள்...! வேகமாக சென்று கொண்டிருக்கும்…
-
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்....
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்.... கடவுளைப் பற்றி எழுதிய பாடல் காதலித்து மணந்த முதல்…
-
எம். ஜி. ஆர். – சிவாஜி இருவர் மனங்களிலும் ஒரே எண்ணம்
எம். ஜி. ஆர். – சிவாஜி இ–னங்களிலும் ஒரே எண்ணம் ஒரே நேரத்தில் எம். ஜி. ஆர். படங்களுக்கும் ச…
-
Good Coincidence in Awards to DR Devi
supergoodmovies.com, Updated on: 09 Dec 2010 Good Coincidence in Awards to DR Devi The yest…
-
திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைக்கும்
January 11, 2010 திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைக்கும் சரோஜாதேவி என்னுடன்…
-
Bharat Kalachar award for Kamalhaasan Sarojadevi
The hindu, [Friday, September 11, 2009] Bharat Kalachar announces awardees for Kamalhaasan Saroj…
-
Kalaimamani awards for Dr Sarojadevi
February 25, 2009 Kalaimamani awards for Dr Sarojadevi CHENNAI: At a time when the city is…
-
Veteran actor Nagesh passes away
oneindia internet web,January 31, 2009 Veteran actor Nagesh passes away Veteran actor Nages…
-
Saroja Devi gets N T Rama Rao National Film Award
Deccan Herald, Hyderabad, Dec 6, (PTI): Saroja Devi gets N T Rama Rao National Film Award Y…
-
Legendary actress Padmini passes away
Hindustantimes ( New Delhi, September 25, 2006) Legendary actress Padmini passes away Padmin…
-
B Sarojadevi to get the Doctorate
Internet web page"Oneindia" Friday, December 08 2006 B Sarojadevi to get the Doctorate Mult…
-